

நாமக்கல்: இந்திய கணசங்கம் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் நிறுவனத் தலைவர் மு.பெ.முத்துசாமி தலைமை வகித்தார்.
இந்திய கணசங்கம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் விவரம்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க சட்டம் இயற்றப்பட வேண்டும். மாணவர்களை பாதிக்கும் தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வேண்டும்.
மத்திய அரசின் பொதுத்துறை மற்றும் இதர துறைகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். தூய்மை தொழிலாளர்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும்.
முதல் தலைமுறையைச் சேர்ந்த தொழில்முனைவோர்களுக்கு 50 சதவீத மானியத்துடன் தாராளமாக வங்கி கடன் வழங்க வேண்டும். அருந்ததியர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.