கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சேலம்: குண்டுக்கல் ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் திறப்பு

காடையாம்பட்டி அருகே குண்டுக்கல் ஊராட்சியில் முதல்வரின் அம்மா மினி கிளினிக்கை ஓமலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தொடங்கி வைத்தார்.

News image
Updated On :31 ஜனவரி 2021, 7:34 am

DIN

காடையாம்பட்டி அருகே குண்டுக்கல் ஊராட்சியில் முதல்வரின் அம்மா மினி கிளினிக்கை ஓமலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுக்கா குண்டுக்கல் ஊராட்சியானது சிறு சிறு மலை குன்றுகளால் சூழப்பட்ட ஊராட்சியாகும். இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மருத்துவ வசதி வேண்டும் என்றால் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காடையாம்பட்டி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

இந்த நிலையில் இவர்களின் சிரமத்தைப் போக்க  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் குண்டுக்கல் ஊராட்சியில் கிராம சேவை மைய கட்டிடத்தில் அமைக்கப்பட்ட முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை ஓமலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிகிச்சையைத் தொடங்கி வைத்தார்.

இந்த மினி கிளினிக் வாயிலாக சுமார் 10-க்கும் மேற்பட்ட குக்கிராமத்தில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்பாக்கி கிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் சாதுபக்தசிங், ஊராட்சி மன்றத் தலைவர் குப்புசாமி உள்ளிட்ட பொதுமக்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.