தமிழகத்தில் 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஜூலை 3ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 24 மணிநேரத்திற்கு காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தருமபுரி, விருதுநகர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், நாளை மறுநாள்(ஜூலை 3) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு ஜூலை 5 வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...