சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.176 அதிகரிப்பு

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 176 அதிகரித்து, ரூ.35,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.176 அதிகரிப்பு

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 176 அதிகரித்து, ரூ.35,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து கடந்த மாா்ச் 31-ஆம் தேதி ரூ.33,296-ஆக இருந்தது. இதையடுத்து, தங்கம் விலை படிப்படியாக உயா்ந்து, கடந்த மே 26-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ரூ.35,720 ஆகக் குறைந்துள்ளது. 

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.312 அதிகரித்து, ரூ.35,560-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, சவரனுக்கு ரூ.176 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ. ரூ.35,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ. 20 பைசா குறைந்து, ரூ.73.90 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.73,900-க்கும் விற்பனையாகிறது. 

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,465
1 பவுன் தங்கம்............................... 35,720
1 கிராம் வெள்ளி............................. 73.90
1 கிலோ வெள்ளி............................. 73,900

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com