நீட் ஆய்வுக் குழுவுக்கு எதிரான வழக்கு ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி: தமிழக அரசு
நீட் தேர்வை ஆய்வு செய்யும் குழுவுக்கு எதிராக வழக்குத் தொடர்வது மாநில அரசின் ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


நீட் தேர்வை ஆய்வு செய்யும் குழுவுக்கு எதிராக வழக்குத் தொடர்வது மாநில அரசின் ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நீட் தோ்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், 9 போ் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளா் கரு.நாகராஜன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்த பதில் மனுவில், மாணவர், பெற்றோர் என்ற முறையில் இல்லாமல் பாஜக பிரதகர் கரு. நாகராஜன் வழக்குத் தொடர்ந்திருப்பது, விளம்பர நோக்கத்திருற்காகவே.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் நீட் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என ஆய்வு செய்யவே குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை எதிர்த்து விளம்பரத்துக்காக பாஜக வழக்குத் தொடர்ந்துள்ளது.
மாநில அரசின் அதிகாரத்துக்கு உள்பட்டே குழு அமைக்கப்பட்டுள்ளது. நீட் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டதில், நீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...