கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மேக்கேதாட்டு திட்டம் தமிழகத்தைப் பாதிக்காது: ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்

மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டம் தமிழக விவசாயிகளின் நலனைப் பாதிக்காது என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

News image

மேக்கேதாட்டு திட்டம் தமிழகத்தைப் பாதிக்காது: ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்

Updated On :3 ஜூலை 2021, 12:37 pm

DIN


மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டம் தமிழக விவசாயிகளின் நலனைப் பாதிக்காது என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி கர்நாடக அரசு மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்துப் பேச தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வரும் 5-ம் தேதி தில்லி செல்கிறார்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் எடியூரப்பா குறிப்பிட்டுள்ளது:

"இந்தத் திட்டம் இரண்டு மாநிலங்களுக்குமே மிகப் பெரிய அளவில் பலனளிக்கும். திட்டத்தை அமல்படுத்துவது தமிழக விவசாயிகளின் நலன்களை எந்த விதத்திலும் பாதிக்காது. தேவைப்பட்டால் இதுகுறித்த அனைத்து அச்சங்களையும் போக்க அந்தத் துறை அதிகாரிகள் முன்னிலையில் இருதரப்பு சந்திப்பையும் நடத்தலாம்." 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.