கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சூர்யாவிற்கு எதிராக பாஜக இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம்

மாணவர்களை குழப்பும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக உண்மைக்கு மாறான தகவலை பரப்பி வரும் சூர்யா, மத்திய அரசு கொண்டுவரும் மக்கள் நல திட்டங்களை உள்நோக்கத்துடன் எதிர்த்து வருகிறார்.

News image
Updated On :10 ஜூலை 2021, 8:51 am


சென்னை: மாணவர்களை குழப்பும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக உண்மைக்கு மாறான தகவலை பரப்பி வரும் சூர்யா, மத்திய அரசு கொண்டுவரும் மக்கள் நல திட்டங்களை உள்நோக்கத்துடன் எதிர்த்து வருகிறார் என நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக இளைஞரணி கூட்டத்தில் தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளது. 

பாஜக மாநில இளைஞரணி செயற்குழு கூட்டம், அக்கட்சியின் சென்னை தியாகராயநகரில் உள்ள தலைமை அலுவலகம் கமலாலயத்தில் நடைபெற்றது. 

பாஜக மாநில இளைஞரணிச் செயலாளர் வினோஜ் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் பின்வரும் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

* பேரவையில் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் ஜெய்ஹிந்த் எனும் வார்த்தையை இழிவுபடுத்திய திருச்செங்கோடு பேரவை உறுப்பினர் ஈஸ்வரனுக்கு கண்டனம். 

* மத்திய அரசின் மக்கள் நலத்திட்டம், சட்டங்களை உள்நோக்கத்துடன் சுய விளம்பத்திற்காகத் தொடர்ந்து எதிர்த்து வருகிறார் நடிகர் சூர்யா. அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் பாஜக இளைஞரணி சார்பில் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும், திமுக அரசுக்கு கண்டனம்.

* கோவில் நிலங்களை மீட்க முதல்வர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீட்கப்படும் நிலங்களை உடனடியாக கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

* கரோனா இரண்டாவது அலையை வெற்றிகரமாக எதிர்கொண்ட பிரதமர் மோடிக்கு மனப்பூர்வமான பாராட்டுகள்.

* நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் உடனடியாக திறக்க வேண்டும்.

* திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, சமையல் எரிவாயு மானியம், கும்பத் தலைவிகளுக்கு மாத ஊதியம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.