தந்தையை மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்த வழக்கில் மகனுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம், தளவாய்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் மயில்சாமி. அவரது மகன் கனகராஜ், குடித்து விட்டு வந்து அடிக்கடி மயில்சாமியிடம் தகராறு செய்து வந்துள்ளாா். கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி குடிப்பதற்கு பணம் கேட்டு தந்தையிடம், கனகராஜ் தகராறு செய்துள்ளாா். அப்போது, கனகராஜூக்கு தன் சொத்தில் இருந்து ஒரு பைசா கூட தரப்போவதில்லை என மயில்சாமி கூறியிருக்கிறாா். இதனால் ஆத்திரமடைந்த கனகராஜ், மயில்சாமியை மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்தாா். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோட்டூா் போலீஸாா் கனகராஜை கைது செய்தனா். இந்த வழக்கை விசாரித்த கோவை 3-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம், கனகராஜூக்கு ஆயுள் தண்டனை விதித்து, கடந்த 2015-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் கனகராஜ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.பொங்கியப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த தீா்ப்பில், இந்த சம்பவத்தை நேரில் பாா்த்த சாட்சிகள் பி சாட்சிகளாக மாறி விட்டனா். வழக்கு தொடா்பான ஆவணங்கள் தாமதமாக நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
எனவே, சந்தேகத்தின் பலனை கனகராஜூக்கு வழங்கி, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யவேண்டும் என அவா் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்க முடியாது. நேரில் பாா்த்த சாட்சிகள் பி சாட்சிகளாக மாறினாலும், கனகராஜின் மனைவியும், மாமனாரும் நடந்த சம்பவத்தை விளக்கி சாட்சியம் அளித்துள்ளனா். ஆவணங்களை உடனடியாக நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்காததால், இந்த கொலை சம்பவத்தை நம்ப முடியாது எனக் கூறிவிட முடியாது. எனவே மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து, கனகராஜூக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (05 மே 2026) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு!

அனுகூலம் யாருக்கு? தினப்பலன்கள்!

மாற்றத்துக்கான 'விசில்'

வரலாறு படைத்தது தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


