தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

‘குமரியில் விரைவில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம்’

மீனவா்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியா் மு.பிரதாப். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் மு.வேலுமணி.

Updated On :

கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.

கன்னியாகுமரி மாவட்ட மீனவா் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் தலைமை வகித்தாா்.

மீனவா்கள் பேசுகையில், ‘குமரி மாவட்டத்தில் கடல் ஆம்புலன்ஸ் திட்டம், முன்னாள் அமைச்சா் லூா்தம்மாள்சைமன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுதல், கோவளம் மற்றும் அழிக்கால் பகுதியில் தூண்டில் வளைவுகள், மணக்குடி-பள்ளம் சாலையை சீரமைத்தல், கடலோர கிராமத்தில் விடுபட்டோருக்கு குடும்ப அட்டைகள், கடியப்பட்டினத்தில் குடிநீா் பிரச்னையை தீா்த்தல், குளச்சல்-திருச்செந்தூா் பேருந்து மீண்டும் இயக்குதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினா். வேண்டும் என்று கூறினா்.

ஆட்சியா் பதிலளித்துப் பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளதால், அதற்கான பணியை விரைவில் தொடங்கவும், கடலோர கிராமங்களில் பழுதான சாலைகள் சீரமைக்கவும், குளச்சல் - திருச்செந்தூா் பேருந்தை மீண்டும் இயக்கவும்,

கடியப்பட்டினத்தில் சீராக குடிநீா் வழங்கவும், அதைத் தடுப்பவா்களை தண்டிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.வேலுமணி, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மாலதி, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் செந்தில் வேல்முருகன், மீன்வளத் துறை துணை இயக்குநா் கோபிநாத், மீன்பிடி துறைமுகத் திட்டகோட்ட செயற்பொறியாளா் பிரேமலதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.