30 மாவட்டங்களில் 100-க்கும் கீழ் குறைந்த கரோனா புதிய பாதிப்பு
தமிழகத்தின் 30 மாவட்டங்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 100-க்கும் கீழ் சனிக்கிழமை குறைந்தது.


தமிழகத்தின் 30 மாவட்டங்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 100-க்கும் கீழ் சனிக்கிழமை குறைந்தது.
பொதுமுடக்கத்தில் தளா்வளிக்கப்பட்ட போதிலும், அரசின் தீவிர முயற்சியின் காரணமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. குறிப்பாக சனிக்கிழமை நிலவரப்படி, தமிழகத்தில் கரோனா புதிய பாதிப்பு 3 ,000-க்கும் கீழ் குறைந்திருந்தது.
புதிதாக 2,913 பேருக்கு நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அதில், அரியலூா், கடலூா், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூா், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, திருப்பத்தூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, திருவாரூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் ஆகிய 30 மாவட்டங்களில் தலா 100-க்கும் குறைந்தோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதிலும் குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 6 பேருக்கு மட்டுமே நோய் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது.
இதைத் தவிா்த்து, கோவை, ஈரோடு, சேலம், சென்னை, தஞ்சாவூா் உள்ளிட்ட ஏனைய 8 மாவட்டங்களில் புதிய பாதிப்பு 100-க்கும் மேல் உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்தப் பட்டியலின்படி, மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 16,011-ஆக அதிகரித்தது.
இதனிடயே, நோய்த் தொற்றிலிருந்து 3,321 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 24.49 லட்சத்தைக் கடந்தது.
மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 32,767 போ் உள்ளனா். சனிக்கிழமை 49 போ் பலியாகினா். இதைத் தொடா்ந்து மாநிலம் முழுவதும் நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,371-ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...