தீவிரமடைகிறது தென்மேற்கு பருவக்காற்று: 5 மாவட்டங்களில் மிகக் கனமழை
தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை: தென்மேற்குப் பருவக்காற்று தீவிரமடைவதன் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைவதன் காரணமாக, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கனமழை பெய்யும்.
திண்டுக்கல், ஈரோடு, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானதுமுதல் மிதமான மழை பெய்யும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேகமாக வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.
மேலும், ஜூலை 11ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கனமழை பெய்யும். திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானதுமுதல் மிதமான மழை பெய்யும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேகமாக வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஜூலை 10 முதல் 12ஆம் தேதி வரை நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாலும், மலைப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக் கூடும் என்பதாலும் பொதுமக்கள் மலையேற்றத்தை தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...