தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தோப்புத்துறையில்  மாட்டு வண்டியில் ஆட்டோவை ஏற்றி நூதனப் போராட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த தோப்புத்துறையில மாட்டு வண்டியில் ஆட்டோவை ஏற்றிய மனிதநேய ஜனநாயக கட்சியினர்  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சனிக்கிழமை (ஜூலை.10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர

News image
தோப்புத்துறையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாய கட்சியினர்.
Updated On :10 ஜூலை 2021, 9:42 am

DIN


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த தோப்புத்துறையில மாட்டு வண்டியில் ஆட்டோவை ஏற்றிய மனிதநேய ஜனநாயக கட்சியினர்  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சனிக்கிழமை (ஜூலை.10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோப்புத்துறை ஆறுமுகச்சந்திப்பு கடை வீதியில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து நூதனப் போராட்டத்தில்  ஈடுபட்டனர். 

மாட்டு வண்டியில் ஆட்டோவை ஏற்றி வைத்தும், மற்றொரு ஆட்டோவின் மீது சமையல் எரிவாயு உருளையை ஏற்றி மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

போராட்டக்காரர்கள் பெட்ரோல் ,டீசல் விலை உயர்வைக் கண்டித்தும்,மோடிக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நூதனப் போராட்டத்துக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஷேக்அகமதுல்லா தலைமை வகித்தார்.

கட்சியின் நகரச் செயலாளர் முகமது செரிஃப், துணைச் செயலாளர் முருகாைந்தம், விவசாய அணி செயலாளர் கவிஞர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.