மத்திய அரசு வேடிக்கைப் பார்ப்பது நல்லதல்ல: துரைமுருகன்
மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுத்தே தீர்வோம் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுத்தே தீர்வோம் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேக்கேதாட்டு அணை நிச்சயம் கட்டப்படும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், துரைமுருகன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய மோதல் போக்கு இரு மாநிலங்களுக்கு இடையே நடப்பதை மத்திய அரசு வேடிக்கைப் பார்ப்பது நல்லதல்ல. இது இரு மாநிலங்களின் வளர்ச்சிக்கும் உகந்ததல்ல.
ஒரு மாநிலத்திற்குள் ஓடுகிற நீர் அந்த மாநிலத்திற்கே என்று சொந்தம் கொண்டாட முடியாது. நதி நீர் என்பது தேசிய சொத்து என்பதை கர்நாடக அமைச்சர் அறிந்திருப்பார் என கருதுகிறேன்.
தமிழகத்திற்கு வரும் நதி நீரை மறித்து அணை கட்டுவோம் என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பை புறக்கணிப்பது போன்றது என்று துரைமுருகன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...