கும்மிடிப்பூண்டி: தமிழகத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து கும்மிடிப்பூண்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாட்டு வண்டி கட்டி சைக்கிள் பேரணி திங்களன்று நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி பஜாரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தை மத்திய அரசு தடுக்க தவறியதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து மாட்டு வண்டி கட்டியும் சைக்கிள் பேரணியும் கும்மிடிப்பூண்டி கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவரும் ஒன்றிய கவுன்சிலருமான ஏ.மதன்மோகன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் மாநில செயலாளர் வழக்கறிஞர் எம்.சம்பத் பங்கேற்றார். மேலும் நிகழ்விற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.சிவாரெட்டி, வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் கே.அருண்பிரசாத், வட்டார தலைவர்கள் கும்மிடிப்பூண்டி மேற்கு எஸ்.எஸ்.பெரியசாமி, எல்லாபுரம் மேற்கு மூர்த்தி, பூண்டி ரஞ்சித்குமார், நகர தலைவர் குணசேகரன், இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் பெனிஷ், மாவட்டச் செயலாளர் கும்புளி மணி முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன முழக்கமிட்டனர். தொடர்ந்து மாட்டு வண்டி கட்டி அதில் ஏறிய காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கண்டன கோஷம் எழுப்பியவாறு செல்ல, அவர்களை பின்தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட சைக்கிளில் காங்கிரஸ் கட்சியினர் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் இருந்து கோட்டக்கரை வழியே மேட்டுத் தெரு, கும்மிடிப்பூண்டி மின்வாரிய அலுவலகம் வழியே கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தை அடைந்தது.
தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் கும்மிடிப்பூண்டி கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஏ.மதன்மோகன் , மாநில செயலாளர் எம்.சம்பத் கண்டன உரையாற்றினர்.
இந்த நிகழ்வில் வட்டார துணை தலைவர்கள் சசிகுமார், மகேஷ்வரன், மாவட்ட துணை தலைவர்கள் ஹேமகுமார், திவான் முகம்மது, அஸ்வின் ராஜ், தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி பிரேம்குமார், போட்டோ செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 4 ஆஸ்திரேலியா செல்கிறாரா விஜய்? ஆதவ் அர்ஜூனா விளக்கம்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளர் இல்லத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் வீரர் காயம்

தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் காலமானார்: அன்புமணி இரங்கல்
விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


