திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சென்னையில் கரோனா நிலவரம்: நோயாளிகள் எண்ணிக்கை உயர்கிறதா?

சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,680 ஆக உயர்ந்துள்ளது.

News image
சென்னையில் கரோனா நிலவரம்: நோயாளிகள் எண்ணிக்கை உயர்கிறதா?
Updated On :13 ஜூலை 2021, 5:46 am

DIN

சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,680 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கடந்த மே மாதம் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து, தற்போது மெல்ல மீண்டு வரும் நிலையில், மூன்றாம் அலைக்கான எச்சரிக்கைக் குரல்கள் ஆங்காங்கே எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்து வந்த நிலையில், கடந்த வாரத்தில் அந்த குறைவு பெரியளவில் இல்லாமல் ஒரே நிலையில் தொடர்ந்தது.

அந்த நிலை மாறி, இந்த வாரத்தில் கடந்த மூன்று நாள்களாக கரோனா நோயாளிகள் எண்ணிக்கைக் குறையாமல் மெல்ல ஒற்றை இலக்க எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது.

அதாவது, இன்று கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1,680 ஆக உள்ளது. இது நேற்று 1,661 ஆக இருந்துள்ளது. கடந்த ஞாயிறன்று 1659 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். எனவே, குறையும் போக்கு நின்று, மெல்ல அதிகரிக்கும் போக்குத் தொடங்கியுள்ளது.

எனவே, கரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தை மறக்காமல், அதன் மூலம் கற்றப் பாடத்தை நினைவில் கொண்டு, மக்கள் கரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

கரோனா இரண்டாம் அலை ஓய்ந்திருக்கலாம். கரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு ஒரேயடியாக ஓயவில்லை. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.