திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

‘கரோனா 3-ம் அலைக்கு அரசியல் கட்சிகள் வழிவகுக்கக் கூடாது’: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கரோனா மூன்றாம் அலைக்கு அரசியல் கட்சிகள் வழிவகுக்கக் கூடாது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தெரிவித்தார்.

News image
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Updated On :14 ஜூலை 2021, 8:40 am

DIN

கரோனா மூன்றாம் அலைக்கு அரசியல் கட்சிகள் வழிவகுக்கக் கூடாது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தெரிவித்தார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்திக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று தில்லி செல்கின்றனர்.

அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசியதாவது,

கரோனா தளர்வுகள் அளிக்கப்படும்போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. திருமணம், இறுதி சடங்குகளில் பங்குபெற கட்டுப்பாடுகள், அரசியல் கூட்டங்களுக்கு தடை உள்ளிட்டவை பின்பற்றப்படுகிறது. இதை மக்கள் பின்பற்ற வேண்டும். அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்கள் மூலம் கரோனா மூன்றாம் அலைக்கு வழிவகுப்பதை தவிர்க்க வேண்டும்.

செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்தில், எந்த நிறுவனம் தடுப்பூசி தயாரிக்கும் என்பது தில்லி சென்ற பிறகு தான் தெரியும் எனத் தெரிவித்தார்.

தில்லி செல்லும் அமைச்சர், தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி, நீட் தேர்வு விலக்கு, செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் உள்ளிட்டவை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.