தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனையில் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கமும், பசுமை சங்ககிரி அமைப்பும் இணைந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

News image
சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கமும், பசுமை சங்ககிரி அமைப்பும் இணைந்து சங்ககிரி அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நட்டு வைக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டுள்ள நிர்வாகிகள். 
Updated On :18 ஜூலை 2021, 9:06 am

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனையில் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கமும், பசுமை சங்ககிரி அமைப்பும் இணைந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

சங்ககிரி அரசு மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகளுக்காக சங்ககிரியை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தினசரி வந்து செல்கின்றனர். மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருபவர்களுக்கு நிழல் கிடைப்பதற்காகவும், இயற்கை காற்றுகள் கிடைக்கவும் மற்றும் பறவைகளின் உணவுகளுக்காக  சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கமும், பசுமை சங்ககிரி அமைப்பும் இணைந்து பத்து நாட்டு கொய்யா மரக்கன்றுகளை சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க இணைச் செயலர் பிஎம்பி.சின்னதம்பி தலைமையில் நட்டு வைத்தனர்.  

Story image

சங்ககிரி அரசு மருத்துவமனையில் பறவைகளின் உணவுகளுக்காக மரக்கன்றுகள் நடல் 

பசுமை சங்ககிரி அமைப்பின் தலைவர் மரம் பழனிசாமி, பசுமை சீனிவாசன், பசுமை கனகராஜ், பசுமை பாலா, கதிர்மதி, தங்கவேலு, காந்தி, தினேஷ், உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.