அதனையடுத்து சங்ககிரி காவல்துறை உதவியோடு அமுதச்சுடர் அறக்கட்டளைத் தலைவர் சத்யபிரகாஸ் தலைமையில் நிர்வாகிகள் மணிகண்டன், அஜித், சிவபாலா, நவீன்குமார் ஆகியோர் ஈரோடு அட்சயம் அறக்கட்டளையினரை தொடர்பு கொண்டுள்ளனர். அந்த அறக்கட்டளையின் நிர்வாகி வி.பாலாஜி தலைமையில் நிர்வாகிகள் தினேஷ், கிருபா, நந்தினி, சரண்யா, கார்த்திக், ஆனந்த், சுரேஷ் சங்ககிரி வந்து இருவரையும் காப்பகத்தில் சேர்ப்பதற்காக மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். சங்ககிரி அமுதச்சுடர் அறக்கட்டளையின் இளைஞர்களின் சேவையை சங்ககிரியைச் சேர்ந்த ஊர்பொதுமக்கள் பாராட்டினர்.