தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு இன்று முதல் நீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்காக புதன்கிழமை முதல் தண்ணீா் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :20 ஜூலை 2021, 6:57 pm

DIN

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்காக புதன்கிழமை முதல் தண்ணீா் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, பொதுப்பணித் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ஈரோடு மாவட்டம் பவானிசாகா் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் உள்ள நிலங்களின் முதல் போக நன்செய் பாசனத்துக்கு புதன்கிழமை முதல் நீா் திறக்கப்படும். நவம்பா் 17-ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு 5 ஆயிரத்து 184 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டங்களிலுள்ள 15,743 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.