எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நியாய விலைக்கடைகளில் தேவையின்றி வெளி ஆட்கள் இருந்தால் கைது: தமிழக அரசு எச்சரிக்கை 

நியாய விலைக்கடைகளில் பணியாளர்களைத் தவிர காணப்படும் இதர வெளி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :21 ஜூலை 2021, 6:21 am

DIN



நியாய விலைக்கடைகளில் பணியாளர்களைத் தவிர காணப்படும் இதர வெளி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சில நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களைத் தவிர இதர வெளி நபர்கள் கடையில் இருப்பதாகவும், இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதனைத் தவிர்க்கும் விதமாக கூட்டுறவுத்துறை அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி, நியாய விலைக்கடை பணியாளர்களை ஒரே கடையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. 3 ஆண்டுக்கு மேலாக ஏதேனும் பணியாளர் ஒரே கடையில் பணிபுரிந்து கொண்டிருந்தால் அவர்கள் உடனடியாக அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு பணிமாற்றம் செய்யப்பட வேண்டும்.

நியாய விலைக்கடைகளில் சம்மந்தப்பட்ட பணியாளர்களை தவிர வெளிநபர்கள் யாரும் இருக்கக்கூடாது. அவ்வாறு வெளிநபர்கள் நியாய விலைக்கடைகளில் இருந்தால், இதுகுறித்து காவல் துறை மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, கைது உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் வெளிநபர்கள் கடையில் அனுமதித்து, அவர்களுக்கு துணைபோகும் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மீதும் மேற்குறிப்பிட்ட குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வுறிவுரைகளுக்கு பின்னரும் நியாநவிலைக்கடைகளில் வெளி நபர்கள் காணப்படுவதாக புகார்கள் பெறப்பட்டால் இதற்கு சம்மந்தப்பட்ட நியாயவிலைக்கடை விற்பனையாளரே பொறுப்பு என கருதி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.