மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பவானி காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து தண்ணீர் திறப்பு

பவானி காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :21 ஜூலை 2021, 10:57 am

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானியில்  காலிங்கராயன் அணைக்கட்டு உள்ளது. பவானிசாகர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் பவானி ஆறு வழியாக காளிங்கராயன் அணைக்கட்டு வந்தடைகிறது.

இங்கிருந்து வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரானது காளிங்கராயன் பாளையம், ஈரோடு, பள்ளிபாளையம், வெண்டிபாளையம், கருமாண்டம்பாளையம், பணப்பாளையம், கொடிமுடி வரை 56 மைல் தூரம் செல்கிறது. இப்பகுதிகளில் உள்ள 15 ஆயிரத்து 743 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.

இந்நிலையில் இன்று முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்  மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி கலந்துகொண்டு மதகுகளை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து காலிங்கராயன் வாய்க்காலில் பொங்கும் நுரையுடன் சீறிப்பாய்ந்த தண்ணீருக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீரால் விவசாயிகள் கரும்பு, வாழை, மஞ்சள், நெல்  உள்ளிட்டவைகளை பயிர் செய்து பயனடைய முடியும் என தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணி, பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் துணைத் தலைவர் கலைச்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் குணசேகர், ஈஸ்வரமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் தீபக் ராஜா, மாவட்ட மகளிரணித் தலைவி புனிதம் ஐயப்பன், மாவட்டச் செயலாளர் கிருஷ்ணவேணி, செந்தில்குமார், மண்டலத் தலைவர்கள் நந்தகுமார், அன்பரசு, செல்வகுமார், குணசேகர், காலிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம் மற்றும் நிர்வாகிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.