மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மானாமதுரையில் எஸ்.ஆர்.எம்.யூ. ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ. ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

News image

மானாமதுரை ரயில் நிலையம் முன்பு எஸ்.ஆர்.எம் .யூ. சங்கத்தின் ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Updated On :27 ஜூலை 2021, 5:40 am


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ. ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், ஏ.ஐ.ஆர்.எப். தலைவர்களின் தொலைபேசி பேச்சுக்கள் சிலரால் ஒட்டுக் கேட்கப்படுவதைக் கண்டித்தும் ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மானாமதுரை ரயில் நிலையம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர். எம்.யூ. மானாமதுரை கிளைத் தலைவர் இருளப்பன் தலைமை தாங்கினார், செயலாளர் சங்கரதாஸ் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மானாமதுரை கிளையைச் சேர்ந்த ஏராளமான ரயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.  இவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.