தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

எடப்பாடி பகுதியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஆளும் திமுக அரசின் மெத்தன போக்கினைக் கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி எடப்பாடி பகுதியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அதிமுகவினர்.
Updated On :28 ஜூலை 2021, 6:35 am

DIN


ஆளும் திமுக அரசின் மெத்தன போக்கினைக் கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி எடப்பாடி பகுதியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் ஒன்றிய பகுதிகளில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கொங்கணாபுரம் ஓமலூர் பிரதான சாலையில், ஒன்றியக்குழு தலைவர் கரட்டூர் மணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில், திமுக  தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும், டீசல் பெட்ரோல் விலை குறைத்திட வலியுறுத்தியும், நிகழ் ஆண்டிலேயே நீட் தேர்வினை ரத்து செய்ய கோரியும், குடும்பத் தலைவி உதவித் தொகையை உடனடியாக வழங்கிட கோரியும், திரளான அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.