சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கரோனா பரவல் குறைகிறது: கையிருப்பில் 6.5 லட்சம் தடுப்பூசிகள்: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் வேகமாக பரவி வந்த கரோனா தொற்று தற்போது அதே வேகத்தில் குறைந்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

News image
மா.சுப்பிரமணியன் (கோப்புப்படம்)
Updated On :2 ஜூன் 2021, 5:55 am

DIN

தமிழகத்தில் வேகமாக பரவி வந்த கரோனா தொற்று தற்போது அதே வேகத்தில் குறைந்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, 

தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், பாதிப்பில் இருந்து மீளலாம் என மக்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா நோயாளிகள் இல்லை என்ற நிலை விரைவில் உருவாகும்.

தமிழகத்தில் தற்போது 6.5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. ஜீன் மாதத்திற்கான 42 லட்சம் தடுப்பூசிகளில் நேற்று சுமார் 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளன.

இதனால், இன்னும் 4 நாள்களுக்கு போதுமான அளவு தடுப்பூசிகள் இருப்பதாகவும் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.