செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்திக்கு உத்தரவிட முடியாது: நீதிமன்றம்
மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


செங்கல்பட்டில் உள்ள நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்திக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவரக்கோரி வெர்னிகோ மேரி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
இதனை இன்று (ஜூன்3) விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், செங்கல்பட்டில் உள்ள நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்திக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது நீதிமன்றம் தலையிடுவது முறையல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஹெச்.எல்.எல். நிறுவனத்தில் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அரசுகள் முடிவெடுக்கும் என நம்புகிறோம் என்றும்,
குத்தகைக்கு கேட்ட தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்க மத்திய அரசுக்கு அவகாசம் தேவைப்படாதா? என்றும் கருத்து தெரிவித்து நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...