வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

5 திட்டங்களை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தை ஒட்டி , கரோனா நிவாரணம் 2-ஆவது தவணை ரூ.2,000, 14 மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட 5 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

News image
தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த ரேஷன் கடைகளில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட 14 பொருட்கள்.
Updated On :27 ஜனவரி 2024, 8:22 pm

DIN

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தை ஒட்டி , கரோனா நிவாரணம் 2-ஆவது தவணை ரூ.2,000, 14 மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட 5 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

Story image

முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்த  ரேஷன் கடைகளில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட 14 பொருட்கள்.

 
தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கரோனா நிவாரணத் தொகை 2-ஆவது தவணை ரூ.2 ஆயிரத்துடன், 14 மளிகைப் பொருள்களான கோதுமை மாவு, உப்பு, ரவை தலா 1 கிலோ, சா்க்கரை, உளுத்தம் பருப்பு தலா அரை கிலோ, புளி, கடலை பருப்பு தலா கால் கிலோ, கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள் தலா 100 கிராம், டீதூள் 100 கிராம் பொட்டலம் 2, குளியல் சோப்பு, துணி சோப்பு தலா 1 ஆகிய பொருள்கள் அடங்கிய அடங்கிய பைகளை, அரிசி அட்டைதாரா்களுக்கு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

இதையடுத்து உங்கள் தொகுதியில் முதல்வர் திட்ட பயனாளிகள் 10 பேருக்கும் நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

Story image

தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை சார்பில் பெறப்பட்ட பட்டாவுடன் பத்மாவதி.

இதனைத்தொடர்ந்து 12,959 கோயில்களில் மாத ஊதியமின்றிப் பணிபுரியும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அா்ச்சகா்கள், பூசாரிகள், பணியாளா்களுக்கு கரோனா கால உதவித் தொகையாக ரூ.4,000, மளிகைப் பொருள்கள் அளிக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். 

Story image
Story image

பணியின் போது மரணம் அடைந்த பத்திரிகையாளா்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி அளிக்கும் திட்டத்தின்படி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம்  பெறப்பட்ட பத்திரிகையாளா்கள் குடும்பத்தினர்.

Story image

மேலும் பணியின் போது மரணம் அடைந்த முன்களப் பணியாளா்களான பத்திரிகையாளா்கள், மருத்துவா், மருத்துவப் பணியாளா், காவலா், நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி ஆகியவற்றையும் முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.