47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காயிதே மில்லத் பிறந்த நாள்: நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை

காயிதே மில்லத் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. 

News image
Updated On :5 ஜூன் 2021, 10:25 am

DIN

காயிதே மில்லத் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. 
இதுகுறித்து அதிமுக தலைவக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப்பின் 126-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை (5.6.2021 - சனிக் கிழமை), சென்னை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா மசூதியில் அமைந்துள்ள கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் நினைவிடத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக அமைப்புச் செயலாளரும், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான னு. ஜெயக்குமார், கழக இலக்கிய அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ளு. கோகுல இந்திரா, அமைப்புச் செயலாளரும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளருமான ஆதிராஜாராம் மற்றும் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.