வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சென்னையில் 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கரோனா நோயாளிகள்

சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 

News image
சென்னையில் 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கரோனா நோயாளிகள்
Updated On :8 ஜூன் 2021, 5:44 am

DIN

சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 

சென்னை மாநகராட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு நிலவரப்படி சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 5,18,162 ஆக உள்ளது. சென்னையில் இதுவரை கரோனாவுக்கு 7,516 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 4,91,462 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 19,184 ஆக குறைந்துள்ளது. 

நேற்று மட்டும் 28,531 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் கரோனா பாதிப்பு 1,748 ஆக உள்ளது. கோடம்பாக்கம், அண்ணா நகர், அடையாறு ஆகிய மண்டலங்களில் பாதிப்பு தலா 1,600 ஆக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.