பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

அடைக்கலம் அமைப்புசாரா தொழிலாளர்கள் 200 பேருக்கு கரோனா நிவாரணம்

அடைக்கலம் அமைப்புசாரா தொழிலாளர்கள் 200 பேருக்கு கரோனா நிவாரணங்களை திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். சந்திரன் வழங்கினார். 

News image

அடைக்கலம் அமைப்புசாரா தொழிலாளர்கள் 200 பேருக்கு கரோனா நிவாரணங்களை வழங்கும் திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். சந்திரன்.

Updated On :9 ஜூன் 2021, 9:08 am

DIN

திருத்தணி: அடைக்கலம் அமைப்புசாரா தொழிலாளர்கள் 200 பேருக்கு கரோனா நிவாரணங்களை திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். சந்திரன் வழங்கினார். 

அடைக்கலம் அமைப்புசாரா தொழிலாளர்கள் பாதுகாப்பு நல சங்கம் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி திருத்தணி பைபாஸ் சாலையில் புதன்கிழமை நடைபெற்றது. 

மாநிலத் தலைவர் ஆர் பெருமாள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். சந்திரன் கலந்துகொண்டு அரிசி, காய்கறிகள், உணவு, முகக்கவசம் கபசுர குடிநீர் ஆகியவற்றை 200 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கினர். 

நிகழ்ச்சியில் திருத்தணி நகர கழக பொறுப்பாளர் வினோத்குமார் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் மு. நாகன், முன்னாள் கவுன்சிலர்கள் ஜி.எஸ். கணேசன், சாமிராஜ், பொதுச்செயலாளர் நிர்மலா, திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செண்பகவல்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.