தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ. பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :14 ஜூன் 2021, 10:44 am

DIN


சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ. பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று (திங்கள்கிழமை) நண்பகல் 12 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சியின் துணைத் தலைவர் மற்றும் கட்சியின் கொறடா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சியின் துணைத் தலைவராக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எஸ்.பி. வேலுமணி கொறடாவாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துணை கொறடா: அரக்கோணம் எம்எல்ஏ க. ரவி

பொருளாளர்: கடம்பூர் சி. ராஜூ

செயலாளர்: கே.பி. அன்பழகன்

துணைச் செயலாளர்: பி.ஹெச். மனோஜ் பாண்டியன்

முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி கே. பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.