தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ககரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டாம் தவணையாக ரூ. 2000 வழங்கும் திட்டம் மற்றும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான சிறப்பு நிவாரண மளிகை தொகுப்பு வழங்கல் மற்றும் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர். கிளாட்ஸ் டன் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் எம். ஜெயச்சந்திரன், ஆற்காடு எம்எல்ஏ ஜே.எல். ஈஸ்வரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.