47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மாயமான கோயில் சிலைகள், நகைகளைக் கண்டுபிடிக்க நடவடிக்கை: இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவு

மாயமான கோயில் சிலைகள், நகைகளைக் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென இந்துசமய அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

News image
சென்னை உயர்நீதிமன்றம்
Updated On :17 ஜூன் 2021, 8:18 am

DIN

சென்னை: மாயமான கோயில் சிலைகள், நகைகளைக் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வெங்கட்ராமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்துக்கள், நகைகள் குறித்த விவரங்கள் அடங்கிய பதிவேடு மாயமாகியுள்ளது. இதனால் கோயில் சிலைகள், நகைகள் காணாமல் போயுள்ளதாக கோரியிருந்தார். 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வெங்கட்ராமன், சிலைக்கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த ஆட்சியில் இந்த வழக்கில் அறநிலையத் துறை தாக்கல் செய்த அறிக்கையில், சிலைகள், நகைகள் காணாமல் போகவில்லை எனக்கூறி, திருட்டுகள் மறைக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, அறநிலைய துறை ஆணையருக்கு ஆவணங்கள், சிலைகள், நகைகள் மாயமானது குறித்து மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிலைகள், நகைகள் எங்கிருந்து காணாமல் போயின என்பதை கண்டறிய வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் தடுக்கும் வகையில் திட்டம் வகுக்கவும் ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. மனுதாரரின் குற்றச்சாட்டுக்கள் தீவிரமாக உள்ளதால், இந்து சமய அறநிலையத் துறை, ஏற்கனவே தாக்கல் செய்த பதில்மனுவில் எடுத்துள்ள நிலைபாட்டை மறுபரிசீலனை செய்து புதிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் புராதனக் கோயில்களை பாதுகாக்க வேண்டும், காணாமல் போன சிலைகள், நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.