அர்ச்சகர்கள் 231 பேருக்கு ரூ. 4000, அரிசி, மளிகைப் பொருள்கள்: அமைச்சர் வழங்கினார்

செங்கல்பட்டு மாவட்டத் தில் வாழ்வாதாரத்தை இழந்த கோயில்களின் அர்ச்சகர்கள் 231 பேருக்கு ரூ. 4000 மற்றும் அரிசி மளிகைப் பொருள்களை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.
அர்ச்சகர்கள் 231 பேருக்கு ரூ. 4000, அரிசி, மளிகைப் பொருள்கள்: அமைச்சர் வழங்கினார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்த கோயில்களின் அர்ச்சகர்கள் 231 பேருக்கு ரூ. 4000 மற்றும் அரிசி மளிகைப் பொருள்களை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட கோயில்களில் வேலைப்பார்க்கும் அர்ச்சகர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ. 4000 மற்றும் 10 கிலோ அரிசி, 150 வகையான  மளிகைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயிலில் நடைபெற்றது.  

தமிழக முதல்வரின் ஆணையின்படி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி இந்துசமய அறநிலையத் துறை சார்பாக திருக்கோயில்களில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ. 4000/ உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகை மளிகைப் பொருள்களை வழங்கும் விழாவிற்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.ரகுநாத் தலைமை தாங்கி தலைமை உரை ஆற்றினார். இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பொ. ஜெயராமன் வரவேற்றுப் பேசினார். செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலை வகித்துப் பேசினார்.

ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பயனாளிகளான அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் சிவாச்சாரியார்களுக்கு கரோனா நிவாரண உதவிகளை வழங்கி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அவர் பேசுகையில் தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்களில் மாத சம்பளம் ஏதும் இன்றி பணியாற்றிவரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் பூசாரிகள் மற்றும் இதர கோயில்கள் பணியாளர்கள் உள்பட 14,000 பயனாளிகளுக்கு அவர்களின் வாழ்வாதாரம் கருதி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உதவித் தொகை ரூ.4000, 10 கிலோ அரிசி உள்பட 15 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் இணை ஆணையர் மண்டலத்திற்கு உட்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களில் மாத சம்பளம் ஏதுமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள் சிவாச்சாரியார்கள் பட்டாச்சாரியார்கள் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் 231 பேருக்கு கரோனா நோய்த்தொற்றின் காரணமாக அவர்களின் வாழ்வாதாரம் கருதி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி  இந்த நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

விழாவில் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, செங்கல்பட்டு வட்டாட்சியர் ராஜேந்திரன், திமுக நகரச் செயலாளர் நரேந்திரன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் அன்புச்செல்வன், நகர நிர்வாகிகள் சந்தோஷ் கண்ணன் மண்ணு, ஆப்பூர் சந்தானம், மறைமலைநகர் முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு சக்தி விநாயகர் கோவில் செந்தில்குமார், சிங்கப்பெருமாள் கோயில் பாடலாத்ரி, நரசிம்மர் கோயில் சிவசண்முக பொன்மணி, திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் குமரன், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில் வெங்கடேசன் உள்ளிட்ட கோயில் செயல் அலுவலர்கள் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். முடிவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் க.பெ. கவெணிதா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com