விவேகானந்தா, குட் சமாரிட்டன் கல்வி நிறுவனங்கள் சார்பில் கரோனா நிவாரணம் வழங்கல்

சீர்காழியில் உள்ள விவேகானந்தா, குட்சமாரிட்டன் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் 500 ஊழியர்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான குடும்பத்திற்கு தேவையான பொருள்களை  நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது. 
விவேகானந்தா, குட் சமாரிட்டன் கல்வி நிறுவனங்கள் சார்பில் கரோனா நிவாரணம் வழங்கல்
விவேகானந்தா, குட் சமாரிட்டன் கல்வி நிறுவனங்கள் சார்பில் கரோனா நிவாரணம் வழங்கல்

சீர்காழி: சீர்காழியில் உள்ள விவேகானந்தா, குட்சமாரிட்டன் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் 500 ஊழியர்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான குடும்பத்திற்கு தேவையான பொருள்களை  நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது. 

இவ்விழாவில்  சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நிவாரண பொருள்களை பயனாளிகளுக்கு வழங்கி, கரோனா காலத்தில் நாம் ஒருவருக்கொருவர் நம்மால் முடிந்த உதவிகளை செய்து, சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக இருந்திட அறிவுறுத்தினார். 

விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார் . செயளாலர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். குட் சமாரிட்டன் பப்ளிக் பள்ளி இயக்குனர்கள் பிரவீன் வசந்த், அனுஷா பிரவீன் மற்றும் குட் சமாரிட்டன் கல்வியியல் கல்லூரி இயக்குனர்கள் அலெக்ஸாண்டர் ஹெப்ளின், ரினி அலெக்ஸாண்டர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஜோஷ்வா பிரபாகரசிங் வரவேற்றார்.  பள்ளியின் துணை  முதல்வர் சரோஜா தாமோதரன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com