கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தது

கர்நாடகம் மற்றும் கேரளத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் செவ்வாய்க்கிழமை காலை தமிழகம் வந்தடைந்தது.
கர்நாடக அணைகளின் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்து அடைந்துள்ளதால், நீரின்றி வரண்டு காணப்பட்ட ஐந்தருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்
கர்நாடக அணைகளின் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்து அடைந்துள்ளதால், நீரின்றி வரண்டு காணப்பட்ட ஐந்தருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்
Published on
Updated on
2 min read


பென்னாகரம்: கர்நாடகம் மற்றும் கேரளத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் செவ்வாய்க்கிழமை காலை தமிழகம் வந்தடைந்தது.

கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரளம் உள்ளிட்ட இரு மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அளவிலான கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி திங்கள்கிழமை காலை கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 5 ஆயிரம் கன அடியும், கபினி அணையிலிருந்து 5283 கன அடி என மொத்தம் 10283 கன அடி தண்ணீர் ஆனது காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இரு அணைகளிலிருந்தும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்ட உபரி நீரானது செவ்வாய்க்கிழமை காலை தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தமிழக பகுதியான ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது. 

கடந்த சில நாள்களாக தமிழக காவிரிக் கரையோரப் பகுதிகளான பிலிகுண்டு ஒகேனக்கல் அஞ்செட்டி நாற்றாம்பாளையம், கேரட்டி மற்றும் காவிரி கரையோரத்தில் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் மழை பெய்து வந்ததால் அவ்வப்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், இந்த மாதத்தில் இருமுறை அதிகபட்சமாக நொடிக்கு  2 ஆயிரம் கன அடியாக அதிகரித்து காணப்பட்டது. 

பிலிகுண்டுலு பகுதியில் உள்ள மத்திய நீர் ஆணையத்தின் நீர் அளவிடும் பகுதி
பிலிகுண்டுலு பகுதியில் உள்ள மத்திய நீர் ஆணையத்தின் நீர் அளவிடும் பகுதி


மேலும் திங்கள்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 1500 கன அடியாகவும், செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 1200 கன அடி என என ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து கொண்டே வந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்த நிலையில் பிரதான அருவி சீனி அருவி, ஐந்தருவி மற்றும் சிற்றருவிகளில் நீர்வரத்து குறைந்து பாறைகளாக காட்சியளித்தன. 

மேலும் காவிரி ஆற்றில் தண்ணீரானது சிறு சிறு குட்டை போல் தேங்கி காணப்பட்டது. தற்போது கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் தமிழக பகுதியில் உறைவிடமான பிலிகுண்டுலு கடந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக ஒகேனக்கல் பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் நீர்வரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலுமாக இன்று மதியத்திற்குள் ஒகேனக்கல் பகுதிக்கு வந்தடையும் என்றும், மேட்டூர் அணைக்கு நாளை காலை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com