தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்றும், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், ஜூன் 29, 30ஆம் தேதிகளில் தமிழக உள்மாவட்டங்கள் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
சென்னை
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பேய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஜூலை 1ஆம் தேதி வரை பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...