
தமிழகத்தில் அளிக்கப்பட்ட தளர்வுகளின்படி, பேருந்து சேவை தொடங்கிய முதல் நாளிலேயே 22 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
கரோனா இரண்டாம் அலை குறைந்ததையடுத்து, தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் நேற்று பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது,
தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 19,290 அரசுப் பேருந்துகளில் 22 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
மேலும், சாதாரண அரசுப் பேருந்துகளை மக்கள் எளிதில் அடையாளம் காண பிரத்யேக வண்ணம் அடிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் திருவள்ளுவர், திருக்குறள் அடங்கிய பலகை வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.