சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தை திருத்தியமைத்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதன் தலைவராக எஸ். பீட்டர் அல்போன்ஸை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்
சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்


சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தை திருத்தியமைத்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதன் தலைவராக எஸ். பீட்டர் அல்போன்ஸை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் உத்தரவில்,  தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், கடந்த 1989ஆம் ஆண்டு, டிசம்பர் 13ஆம் தேதி, முன்னாள் முதல்வர் கருணாநிதியால், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது. 

அதற்குப் பிறகு, கடந்த 2010ஆம் ஆண்டு, மீண்டும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், 2010-இன்படி, சட்டபூர்வ அதிகாரம் பெற்ற ஆணையமாக செயல்பட்டு வருகிறது. 

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருத்தியமைத்து, அதன் தலைவராக எஸ். பீட்டர் அல்போன்ஸை நியமித்து உத்தரவிட்டுள்ளார். 

எஸ்.பீட்டர் அல்போன்ஸ் கடந்த 1989 மற்றும் 1991ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தென்காசி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com