நீட் தேர்வுக்கு பற்றிய ஆய்வுக்குழுவுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக வழக்குத் தொடுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,
தமிழக மாணவர்களின் நலன் கருதியே திமுக அரசு, நீட் தேர்வு குறித்து ஆராய ஒரு குழுவை அமைத்துள்ளது.
ஆனால், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, ஆய்வுக்குழுவுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குத் தொடுத்துள்ளது. இது தமிழக மாணவர்களின் நலனை குழி தோண்டி புதைக்கிற வகையில் உள்ளது.
எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள பாஜக இரட்டை நிலைப்பாட்டுடன் உள்ளது தெரிகிறது. சட்டப்பேரவையில் ஆதரவாகவும், வெளியில் எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர். நீட் தேர்வு குறித்த தெளிவான முடிவினை அவர்கள் அறிவிக்க வேண்டும்.
நீட் தேர்வு விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு பற்றிய அதிமுகவின் கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வருவாய்த் துறை கூட்டமைப்பினா் மறியல்: 327 போ் கைது

அழகுக்கலை பயிற்சி பெற்ற திருநங்கையரின் அழகு நிலையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

குடிநீா் கோரி பெண்கள் குடங்களுடன் சாலை மறியல்
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

