பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது, மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மட்டுமே நடைபெறும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

அமைச்சர் செந்தில் பாலாஜி

Published On :

தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது, மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மட்டுமே நடைபெறும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: 

கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய பராமரிப்புப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன; மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மட்டுமே இனி நடைபெறும். எனவே தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது. 

தமிழகம் முழுவதும் மின்வெட்டு என இனி பொத்தம் பொதுவாக சொல்லக்கூடாது. 

கடந்த 2006-11 திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மின் திட்டங்கள் செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவையெல்லாம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு மின் உற்பத்திப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. 

தமிழகத்தில் 4,23,000 மின் இணைப்புக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். அப்படியிருக்க தமிழகம் மின்மிகை மாநிலம் என்று கூற முடியாது. 

2006-11ல் 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் 2,04,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 2, 08000 பேருக்கு மட்டுமே இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரம் எவ்வளவு தேவைப்பட்டது, வரும் காலங்களில் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்று ஆராய்ந்து அதற்கேற்ப பணிகள் முடுக்கிவிடப்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.