தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஈரோடு அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பாடநூல்களை அமைச்சர் வழங்கினார்

அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை மற்றும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்களை தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

News image
Updated On :30 ஜூன் 2021, 9:32 am

DIN

அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை மற்றும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்களை தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

கரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு தற்போது ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஈரோடு உப்பட 11 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்ட பள்ளிகளில் தொடங்கியது.

இந்நிலையில் தற்போது கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஈரோடு உட்பட 11 மாவட்டங்களிலும் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று பெரியார் வீதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சேர்க்கை மற்றும் இலவச பாடநூல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு புதிதாக 69 மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்றது மற்றும் இலவச பாடநூல்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.