சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் பிரச்னை: கோடியக்காடு கிராமத்தினர் சாலை மறியல்

குடிநீா் பிரச்னைக்கு தீா்வு ஏற்படுத்தக் கோரி, கோடியக்காடு கிராமத்தினர் சாலையில் காலிக் குடங்களுடன் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
கோடியக்காடு கிராமத்தில் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்.
Updated On :3 மார்ச் 2021, 9:03 am

DIN

வேதாரண்யம்: குடிநீா் பிரச்னைக்கு தீா்வு ஏற்படுத்தக் கோரி, கோடியக்காடு கிராமத்தினர் சாலையில் காலிக் குடங்களுடன் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கோடியகாடு பகுதியில் கூட்டுக் குடிநீர் விநியோகத் திட்டத்தின் கீழ் ஒரு வாரக் காலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 

இது தொடா்பாக ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள், குடிநீர் கேட்டு ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்மணி  தலைமையில் கோடியக்காடு கிராமத்தினர் புதன்கிழமை (மார்ச்.3) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.