விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுக சார்பில் மீண்டும் போட்டி

அதிமுக சார்பில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 6 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியானது. 

இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போடிநாயக்கநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம்  போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் சி.வி. சண்முகம் ஏற்கெனவே இந்த தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகியுள்ளார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் அதிமுக சார்பில் அதே தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சி.வி. சண்முகம் விழுப்புரத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து விழுப்புரம் காந்தி சிலை பகுதியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வண்டிமேடு ராமதாஸ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பசுபதி, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் சக்திவேல், அம்மா பேரவை இணைச் செயலாளர்  பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com