நிலக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். தேன்மொழி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் முதல் பட்டியல் இன்று வெளியானது.


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் முதல் பட்டியல் இன்று வெளியானது.
எடப்பாடி, போடிநாயக்கனூர் உள்ளிட்ட ஆறு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலில், நிலக்கோட்டை தொகுதியில் எஸ். தேன்மொழி எம்எல்ஏ போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கோட்டை சட்டப்பேரவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.தேன்மொழி பற்றிய விவரங்கள்:
பெயர் : எஸ் .தேன்மொழி
கல்வி தகுதி - பிளஸ் 2
தொழில் - இல்லை
வயது - 59
சாதி - இந்து பள்ளர்
குடும்பம் - கணவர் வி.எஸ்.எஸ்.சேகர், அரசு ஒப்பந்ததாரர், நிலக்கோட்டை நகர அதிமுக செயலர், முன்னாள் பேரூராட்சி தலைவர். பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
மகன் - சந்திரசேகர், மகள் - சுப்புலட்சுமி. இருவரும் மருத்துவர்.
கட்சிப் பதவி - திண்டுக்கல் மாவட்ட அதிமுக இணைச் செயலர்.
தேர்தல் அனுபவம் - கடந்த 2006 முதல் 2011 வரை நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். கடந்த 2019 இல் நடைபெற்ற நிலக்கோட்டை சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...