விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

திருச்சி விமான நிலையத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

விமானநிலைய ஆணையத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு உரிய ஒப்பந்த விதிமுறைகளின்படி ஓய்வூதிய திட்டத்தை 1.1.2007 முதல் அமல்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

News image
திருச்சி விமான நிலையத்தில் உண்ணாவிரதப் போராட்டம்
Updated On :10 மார்ச் 2021, 9:15 am

DIN

விமானநிலைய ஆணையத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு உரிய ஒப்பந்த விதிமுறைகளின்படி ஓய்வூதிய திட்டத்தை 1.1.2007 முதல் அமல்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் அதன் பிறகும் அதற்கு உண்டான வட்டித் தொகையை ஒப்புக்கொண்டபடி செலுத்துவதில், விமான நிலைய ஆணையமும், மத்திய விமான போக்குவரத்து அமைச்சகமும், இதுவரை நடைமுறை நடைமுறைப்படுத்தவில்லை. 

இது தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. இதனைக்  கண்டித்து விமான நிலைய ஆணைய எம்ப்ளாயீஸ் யூனியன், சார்பில், ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. 

திருச்சி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றுவரும் இப்போராட்டத்தில் விமான நிலைய ஆணைய பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.