பிரசாரத்துக்கு மக்களை சரக்கு வாகனங்களில் அழைத்துச் சென்றால்.. போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை
தேர்தல் பிரசாரங்களுக்கு பொது மக்களை சரக்கு வாகனங்களில் அழைத்து வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையர் எச்சரித்துள்ளார்.


சென்னை: தேர்தல் பிரசாரங்களுக்கு பொது மக்களை சரக்கு வாகனங்களில் அழைத்து வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையர் எச்சரித்துள்ளார்.
நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், போக்குவரத்து ஆணையர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பொதுக்கூட்டத்துக்கோ அல்லது தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கோ பொதுமக்களை இது குறித்து அனுமதிக்கப்பட்ட பயணிகள் வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மாறாக, சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தற்காலிகமாக வாகன உரிமம் ரத்து செய்யப்படும். வாகன உரிமையாளர் மற்றம் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, ஓட்டுநரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...