சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

விசிக போட்டியிடும் தொகுதிகள் நாளை முடிவு: திருமாவளவன்

திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் நாளை (வியாழக்கிழமை) இறுதி செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :10 மார்ச் 2021, 2:22 pm

DIN


திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் நாளை (வியாழக்கிழமை) இறுதி செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவினரோடு ஆலோசனை நடத்திய பிறகு அண்ணா அறிவாலயத்தில் திருமாவளவன் கூறியது:

"எந்தெந்தத் தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது என்பது குறித்து கலந்தாய்வு நடைபெற்றது. நாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்தினோம்.

6 தொகுதிகளில் 4 தொகுதிகள் ஒப்பந்தம் ஆகக்கூடிய நிலையில் உள்ளன. இன்னும் 2 தொகுதிகள் இறுதி செய்யப்பட வேண்டியுள்ளது. நாளை மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்யவுள்ளோம்.  

கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறியோ சிக்கலோ இல்லை. இதுவொரு மெகா கூட்டணி. ஒரு கட்சி போட்டியிடும் தொகுதியை மற்றொரு கட்சியும் கேட்பதால் சுமூகமான முறையில் பேசி இறுதி செய்ய வேண்டியுள்ளது. நாளை எல்லாம் இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும்.

எந்தெந்தத் தொகுதிகள் என்று அடையாளம் காண்டாயிற்றதால், பரிசீலிக்கிறோம் என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 4 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள் என்ற அடிப்படையில் கோரிக்கை வைத்திருக்கிறோம்" என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.