அமமுகவில் இணைந்த எம்எல்ஏ ராஜவர்மன் அதிமுகவிலிருந்து நீக்கம்
அமமுகவில் இணைந்த எம்எல்ஏ ராஜவர்மன் அதிமுகவிலிருந்து நீக்கம்

அமமுகவில் இணைந்த எம்எல்ஏ ராஜவர்மன் அதிமுகவிலிருந்து நீக்கம்

அமமுகவில் இணைந்த சாத்தூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ராஜவர்மன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Published on

அமமுகவில் இணைந்த சாத்தூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ராஜவர்மன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சாத்தூர் தொகுதி எம்எல்ஏ ராஜவர்மனுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட அதிமுக வாய்ப்பளிக்காத நிலையில், இன்று அவர் டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில் அவரை அதிமுகவிலிருந்து விலக்கி கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், கட்சியின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாடடை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் வகையில் செயல்பட்ட காரணத்தினாலும், விருதுநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சாத்தூர் சட்டமன்றத்தொகுதி எம்எல்ஏ எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com