வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

செங்கல்பட்டு தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி அதிமுகவினர் சாலை மறியல்

அதிமுக வேட்பாளராக செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட கஜேந்திரனை மாற்றக் கோரி சிங்கப்பெருமாள் கோயில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
சிங்கப்பெருமாள் கோயிலில் வேட்பாளரை மாற்ற வலியுறுத்தி சாலை மறியல்
Updated On :11 மார்ச் 2021, 11:22 am

DIN

அதிமுக வேட்பாளராக செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட கஜேந்திரனை மாற்றக் கோரி சிங்கப்பெருமாள் கோயில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் நடைபெற்ற உள்ள தேர்தலுக்காக அதிமுக தலைமை தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கஜா என்கிற கஜேந்திரனை செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுக தலைமை புதன்கிழமை அறிவித்த நிலையில் அதிமுக கட்சியின் செங்கல்பட்டு தொகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

Story image

மேலும் தொண்டர்கள் கூறுகையில், 

அதிமுக இக்கட்டான நிலையிலிருந்தபோது வேட்பாளர் கஜா என்கிற கஜேந்திரன் அமமுகவில் பதவி வகித்து வந்தார். அதிமுகவில் நீண்டகாலமாக நற்பெயரோடு மக்களுக்கு தொண்டுகளை செய்து வந்த காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கவுஸ்பாஷா என்பவருக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தி அதிமுகவினர் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்படனர்.

இதேபோன்று அதிமுகவில் செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கஜா என்கிற கஜேந்திரனை மாற்ற வலியுறுத்தி செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிங்கப்பெருமாள் கோயில் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.