நெல்லையில் வேட்புமனு தாக்கல் தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது.


திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நான்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
திருநெல்வேலி பேரவை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் நாம் இந்தியர் கட்சியில் காமாட்சி நாதன் என்ற வேட்பாளர் முதலாவதாக வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்யப்படும் மையங்களை ஆட்சியர் விஷ்ணு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை முழுமையாக செய்ய அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் அறிவுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...